சாலையோரம் குப்பைகள் வீச்சு

Update: 2026-02-08 18:36 GMT

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கா மரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குறுக்கு சாலையோரம் குப்பைகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் இ.பி. நகர், நடராஜ் நகர், ஏ.சி.எஸ். கார்டன் பகுதி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அந்தக் குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. அந்தக் குப்பைகளை சேவூர் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொட்டுகிறார்களா? அல்லது ஆரணி நகராட்சி ஊழியர்கள் கொட்டுகிறார்களா? எனத் தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், சேவூர்.

மேலும் செய்திகள்