வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் ஆர்.கே.மாதா கோவில் தெரு, தேவராஜ் நகர், பி.டி.சி. ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்குள்ள ஆர்.கே.மாதா கோவில் தெரு மெயின் சாலையில் வீரபத்திரன் கோவில் அருகே சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், அவற்றை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், வேலூர்.