தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2025-09-21 08:58 GMT

சென்னை மேல்அயனம்பாக்கம் பகுதியின் வேல்லம்மாள் பள்ளி அருகே அரசு மகளிர் விடுதி அமைந்துள்ளது. பலருக்கு பயனுள்ளதாக உள்ள இந்த விடுதியின் அருகே கல்லறைகள் அமைந்துள்ளது. அதற்கான மதில் சுவர் தற்போதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அங்கிருந்து அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்