அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் அங்கு சேகரமாகும் கழிவுகள் சாலையில் வீசப்படுகிறது. இது உடனடியாக அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மார்க்கெட்டில் கழிவுகளை அகற்ற குப்பை தொட்டிகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.