ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் கிடக்கின்றது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சமபந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட இடத்தில் கூடுதல் குப்பைத்தொட்டி வைக்கவும் , குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.