ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் தேரோடும் வீதிகளான கிழக்கு வீதி, மேற்கு வீதி மற்றும் கோவில் மதில்சுவர் சாலை ஆகிய பகுதிகளில் சிலர் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் குப்பைகள் கொட்டுவது, தீயிட்டு எரிப்பதை தடுக்க வேண்டும்.