வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே சுண்ணாம்புக்காரத்தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் அப்பகுதியில் சீராக செல்வதில்லை. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கால்வாயில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராமன், வேலூர்.