வேலூர் பாலமதி மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல மலைப்பகுதியைச் சுற்றி செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பகுதியில் சில இடங்களில் சாலையோரம் அமர்ந்து பலர் உணவு சாப்பிடுகின்றனர். அந்தப் பிளாஸ்டிக் கவர்களையும், தண்ணீர் பாட்டில்களையும் மலைப்பாதையில் ஆங்காங்கே வீசி விடுகின்றனர். சில இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மது குடிப்பவர்களும் பாட்டில்களை ஆங்காங்கே போட்டு விடுகின்றனர். அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும்.
-மோகன், ஓட்டேரி.