ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் சிலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள் காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.