திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுக்கா,வரதராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரி, அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஏரி அருகே குப்பைகள் வீசப்படுகின்றனர். இதனால் குப்பைமேடு போல காட்சியளிக்கிறது. இந்த குப்பைகளால் ஏரி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.