குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-02-01 13:08 GMT

திருவண்ணாமலை 37-வது வார்டு மணியாரித்தெரு-1 பகுதியில் கடந்த சில நாட்களாகக் குப்பைகள் முறையாகச் சேகரிக்கப்படாததால் சாலையோரம் மலைபோல் தேங்கி கிடக்கிறது. அந்தப் பகுதியில் குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் வருவது இல்லை. குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ப.ஜாபர்பாஷா, சமூக ஆர்வலர், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்