குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-06-14 10:42 GMT

பொங்குபாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பரமசிவம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதேபோல் மாரப்பம்பாளையம் பிரிவிலும் குப்பைகள் அதிக அளவில் உள்ளது. இவை நீண்ட நாட்களாக அள்ளப்படாததால், சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கொசு மற்றும் ஈக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பையை முறையாக அகற்ற வேண்டும்.

குமார், பொங்குபாளையம்.

மேலும் செய்திகள்