நொய்யல் ஆற்றில் வீசப்படும் குப்பைகள்

Update: 2026-06-14 10:41 GMT

திருப்பூரில் நொய்யல் ஆறு பாழ்படுவதை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க ஆற்றின் கரையை சுற்றிலும் இரும்பு கம்பிகளை கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், ஆற்றில் குப்பை கொட்டுவது முழுமையாக தடுக்கப்படவில்லை. சில இடங்களில் கடைகள் மற்றும் வீடுகளில் வெளியாகும் குப்பைகளை இரும்பு வேலிகளை துண்டித்து ஆற்றில் கொட்டி வருகின்றனர். மேலும் சில இடங்களில் வேலிக்கு மேலே ஆற்றுக்குள் குப்பைகளை வீசியும் வருகின்றனர். குறிப்பாக மாநகரப்பகுதியில் வைக்கப்படும் பிளக்ஸ்-பேனர்களின் கிழிந்த பின்னர் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், திருப்பூர்.

மேலும் செய்திகள்