அவினாசி அருகே பெரியகருணபாளையம் முதல் புலகாட்டுபாளையம் செல்லும் சாலையில், குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளை வேலாயுதம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகம் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்து. இதுதொடர்பாக மக்கள் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், பெரியகருணபாளையம்.