திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் 3 இடங்களில் குப்பைகள் சாலையோரமாக குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றப்படாததால் தற்போது மலைபோல் குப்பைகள் நிறைந்து உள்ளது. இதில் ஒருசில மர்மநபர்கள் குப்பைக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதன்காரணமாக அந்தப்பகுதியே புகை சூழ்ந்து, காணப்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகள் உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பெருமாள், திருப்பூர்.