திருப்பூர்-தாராபுரம் சாலையில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் இரவு நேரங்களில் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அந்தப்பகுதியே புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
பாண்டியன், வீரபாண்டி.