பள்ளிபாளையத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகள் தண்ணீரில் ஊறி, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் தினமும் குப்பைகளை அள்ளி தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.நாச்சிமுத்து, பள்ளிபாளையம்.