கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல கூடிய வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக கோழி இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி அங்கு வந்து கொட்டுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நந்தகுமார், கிருஷ்ணகிரி.