சேலம் கொல்லப்பட்டி முதல் பால் பண்ணை வரை சாலையோரம் குப்பை, இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து வீசப்படும் மருத்துவ கழிவுகள் மலைபோல் கொட்டி வைத்துள்ளனர். இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-சசிகுமார், தாரமங்கலம்.