இளம்பிள்ளை பேரூராட்சியில் சேலம் மெயின் ரோடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே கடந்த சில வாரங்கலாக குப்பை கழிவுகள் அள்ளாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. மழைக்காலம் தொடங்கி உள்ளதால் தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க பேரூராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாலாஜி, இளம்பிள்ளை.