சுகாதார சீர்கேடு

Update: 2025-09-28 15:48 GMT

சேலம் 4 ரோடு பெரமனூர் அவுசிங் போர்டு அருகே அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் குப்பைகளை அகற்றவும், அப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பரசன், மெய்யனூர், சேலம்.

மேலும் செய்திகள்