கோவையில் குப்பைகளை வீடு, வீடாக வாங்கி செல்ல முதலில் ஒவ்வொரு பகுதிக்கும் 2 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இப்போது தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தூய்மை பணியாளரை நியமித்து உள்ளனர். இதனால் அளவுக்கு அதிகமான குப்பைகளை தூய்மை பணியாளர் தள்ளுவண்டியில் ஏற்றி தள்ள முடியாமல் தள்ளி செல்லும் நிலையை காண முடிகிறது. எனவே கூடுதல் தூய்மை பணியாளரை நியமிக்க வேண்டும்.