திருப்பூர் குமார் நகர் தொடக்கப்பள்ளி வீதியில் சாலையோரம் குப்பைகள் அதிகம் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.