தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் ஊராட்சியில் இருந்து சித்தேரி கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் ஓடை உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதால் மழைக்காலத்தில் நீர் ஓடையில் செல்லாமல் சாலையில் ஓடும் சூழ்நிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர். எனவே குப்பைகளை தூர்வாரி ஓடையில் தண்ணீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-குமாரசாமி, தலைவாசல்.