கோவை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட செட்டிபாளையம் ரோடு வடிவு நகரில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இங்கு குப்பை தொட்டி உள்ளது. ஆனாலும் உடைந்து கிடப்பதால், குப்பைகளை வெளியே கொட்டி செல்கின்றனர். அந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.