புதருக்குள் குப்பைத்தொட்டி

Update: 2025-06-01 09:56 GMT

பல்லடம் அருகே பணிக்கம்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதை அகற்ற தூய்மை பணியாளர்கள் முன்வருவதில்லை. மேலும் குப்பைத்ெதாட்டியும் உரிய முறையில் பராமரிக்காததால் புதர்சூழ்ந்து கேட்பாரற்ற பரிதாப நிலையில் உள்ளது. குறிப்பாக குப்பைகள் குவிந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றுவதோடு, குப்பைத்தொட்டியை பராமரிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

ஜெயந்தி, பல்லடம்.

மேலும் செய்திகள்