திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் குப்பைகளை வளாகத்தில் போட்டுள்ளதால் குப்பைகள் அதிக அளவில் குவிந்துள்ளது. குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட பொதுமக்களுக்கு அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்