வரத்துவாரியில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-05-11 15:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தெப்பக்குளம் திருக்குளத்துக்கு செல்லும் வரத்து வாரியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இந்த வரத்து வாரி தூர்ந்துபோகும் நிலை ஏற்படுவதுடன் மழை பெய்யும்போது மழைக்காலத்தில் இந்த வரத்து வாரியில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குளத்தில் கலக்கும் நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், மண்ணின் வளம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்