காங்கயம் பழைய கோட்டை சாலையில் சென்னிமலை சாலையிக்கு செல்ல இணைப்பு சாலையில் அடர்ந்த முட்புதர்களாக காணப்படுகிறது. இங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஒரு டிராக்டர் அளவுள்ள பிளாஸ்டிக் கவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சாலையோரம் கொட்டி உள்ளனர். இதனால் அப்பகுதி பிளாஸ்டிக் கவர்களால் ஆன மேடாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் கொட்டும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக் கூடாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்து வரும் நிலையில் சில மர்ம நபர்கள் பொது இடங்களில் பிளாஸ்டிக் கவர்களை கொட்டியதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
கார்மேகம், காங்கயம்.