சேலம் சின்னத்திருப்பதி பெருமாள் கோவில் அருகில் பிரதான சாலையோரம் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் சாலையை ஆக்கிரமித்தவாறு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதலாக குப்பைத்தொட்டி அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-ராகவன், சின்னத்திருப்பதி.