குப்பைகள் அகற்றப்படுமா..?
திருப்பூர் மாநகரில் டி.எம்.எப்.பாலத்தில் மருத்துவமனை அருகில் சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள், மண் மற்றும் கழிவுகள் தேங்கி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். காற்றடிக்கும் போது மண் மற்றும் குப்பைகள் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள்.. இதனால் பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், திருப்பூர்.