காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள நகர கூட்டுறவு வங்கி எதிரில் குப்பைகள் குவியலாக உள்ளது. அதில் ஜவுளிக்கடை, மருத்துவமனை கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகக் கிடக்கின்றன. அந்தக் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
-அய்யப்பன், கே.வி.குப்பம்.