குமரலிங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜாகிர் உசேன் வீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால் கல்வி பயிலும் சூழலும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
பாலா, குமரலிங்கம்.