சுகாதார சீர்கேடு

Update: 2026-01-25 14:51 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் உள்ள சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே  அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குப்பைகளில் இருந்து ஏற்படும் துர்நாற்றத்தால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்