குப்பைத்தீயால் சுவாச கோளாறு

Update: 2026-01-25 17:44 GMT

திருப்பூர் முழுவதும் குப்பை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசிவருகிறது. இதில் சிலர் நள்ளிரவில் குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு அந்த வழியாக செல்பவர்கள் சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்ைகயாகும்.

பாலு, திருப்பூர்.

மேலும் செய்திகள்