கிணற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-01-25 17:41 GMT

உடுமலை குட்டை திடல் அருகே கருப்பராயன் கோவில் வளாகத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. காலபோக்கில் கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பின்னர் இந்த கிணற்றை பராமரிப்பு செய்யவில்லை. இதனால் மக்கள் அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். தற்போது அதிலுள்ள நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதன் பக்கவாட்டில் மரங்கள் வளர்ந்து உள்ளது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த கிணற்றை தூய்மைப்படுத்தி, அதில் குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாகணபதி, உடுமலை.

மேலும் செய்திகள்