ஊத்துக்குளி அருகே திம்மநாயக்கன்பாளையம் மணியோசை நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் லாரிகள் மூலம் தினந்தோறும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அங்கு சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய்கள் பரவுவதால் அந்தப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறாா்கள். அதனால் குவியும் குப்பைகளை அகற்றுவதோடு அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், ஊத்துக்குளி.