குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-02-23 10:06 GMT

கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அங்கு புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு கொட்டப்பட்டு உள்ள குப்ைபகளை உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்