குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-01-11 16:55 GMT

மதுரை டி.வி.எஸ்.நகரை அடுத்த கோவலன் நகர் பகுதியில் உள்ள சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த குப்பைகளில் இருந்து எழும் துர்நாற்றத்தால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் குப்பைகள் தேங்காத வண்ணம் இருக்க குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

மேலும் செய்திகள்