பிரம்மதேசம் அருகே முருக்கேரியில் உள்ள திண்டிவனம்-மரக்காணம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அதில் வைத்துவிட்டு செல்கின்றனர். இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்றில் குப்பைகள் பறப்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.