பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகளை அகற்றாததால் குப்பைக்கூளமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை முறையாக தினமும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.