பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி ஊராட்சி அம்மன் நகர் ஊர்ப்புற நூலகம் எதிரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் பின்பக்கம், அஞ்சல் அலுவலகம் அருகில் தெரு முழுவதும் உள்ள குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் கொட்டாமல் நேரடியாக தரையிலேயே கொட்டிவிட்டு செல்கிறார்கள். அந்தக் குப்பைகள் தெருக்களில் சிதறி கிடக்கின்றனர். பின்னர் குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்துகிறார்கள். இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிப்படைகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உ.சங்கரன், மேல்பட்டி.