ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகளால் வாகனஓட்டிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.