போக்குவரத்து இடையூறு

Update: 2026-06-14 17:36 GMT
மதுரை விளாங்குடி ரெயில்வே கேட் அருகில் இருந்து பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலையின் ஓரங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி அகற்றப்படாமல்  வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்