சாலையோர குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2026-06-14 15:54 GMT

கரூர் - ஈரோடு பிரதான சாலையில், ரெட்டிபாளையம் அருகே சாலையோரம் பெருமளவில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், காற்றில் பறக்கும் குப்பைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்