எலவனாசூர்கோட்டை அருகே பிடாகம் ஊராட்சியில் உளுந்தூர்பேட்டை- சேலம் நெடுஞ்சாலையோரம் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளியேறும் புகையினால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.