சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் எங்கும் குப்பை தொட்டிகள் இல்லை. குப்பை சேகரிக்கும் பணிகளும் முறையாக நடைபெறுவது கிடையாது. இதனால் பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை தொட்டி வைக்க வேண்டும். அல்லது, குப்ைப சேகரிக்கும் பணிைய முறைப்படுத்த வேண்டும்.