குப்பைகளை எரிக்கலாமா?

Update: 2026-06-14 13:22 GMT

காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட சந்தாபுரம் ஊராட்சியில், வீட்டு வசதி வாரியம், நரிமேடு, சரஸ்வதி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து சேகரிக்கும் குப்பைகளை புதிய வீட்டு வசதி வாரியம் அருகே நெடுஞ்சாலை ஓரத்திலும், சரஸ்வதி கார்டன் பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரே சாலை ஓரத்திலும் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குப்பைகளை அங்கு கொட்டுவதையும், எரிப்பதையும் தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்