புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், கேப்பரை, வம்பன் 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தக் கழிவுகளைத் தின்பதற்காக தெருநாய்கள் கூட்டமாகத் திரண்டு, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுப் போட்டிப் போட்டுக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துகளில் சிக்கும் சூழ்நிலை நீடிக்கிறது. எனவே, சாலையோரம் கோழிக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.