ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா சயனபுரம் ஊராட்சியில் பல மாதங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முறையை முறையாக செயல்படுத்தாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சயனபுரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், சயனபுரம்.